முடிவுக்கு வந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம்(Photos)
யாழ்ப்பாணம் வடமாராட்சியில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணி பகிஸ்கரிப்பானது முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம்
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் என்று கோரி நேற்று(27) முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம்(28) போரட்டமானது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பணி பகிஸ்கரிப்பினால் பல நூற்றுக்கணக்கான பயணிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
தீர்வு
வட பிராந்திய முகாமையாளர் நேரடியாக பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு போக்குவரத்து சாலை ஊழியர்களுக்கு உரிய எரிபொருள் மிக விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிமொழி வழங்கியுள்ளார்.
போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து பேருந்து போக்குவரத்தும் இன்றைய தினம்(28) வழமை போல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
