ஊரடங்கு உத்தரவின் முடிவுகள் தொடர்பில் பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள தகவல்
பொது மக்களின் தேவையற்ற இயக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தாவிட்டால் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் முடிவுகளை அடைய முடியாது என்று பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதாகக் கூறி தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் சிலர் நடமாடுவதாக தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின், பயனை குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு பின்னர் எதிர்பார்க்க முடியும். நாளாந்த இறப்புகள் மற்றும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த எண்ணிக்கை குறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை பயன்படுத்தி சிலர் தேவையற்ற பயணங்களில் ஈடுபடுவதால் எதிர்பார்த்த முடிவுகளை அடைய முடியாது என ரோஹன கூறியுள்ளார்.



