இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: டக்ளஸ் ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்னைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதும் ஒன்று.
ஜனாதிபதிக்கு கடிதம்
வடமாகாண தமிழ் கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. எனவே கட்டாயமாக இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.
இது தொடர்பாக நான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு மோடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார்.
அதன்படி, இது ஒரு அரசியல் ரீதியான ஓர் தீர்மானமே. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
