யாழில் சுற்றி வளைக்கப்பட்ட சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று(29) மாலை கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பால சூரிய தலைமையிலான பொலிஸ் கொஸ்தாபிள்களான ஆனந்தராஜ், இந்திக்க, விதுஷன், சமக்தா ஆகியோரின் சுற்றி வளைப்பில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.
பொலிஸார் நடவடிக்கை
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய அடுப்பு, கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதோடு, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam