இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க ஆலோசனை
இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் மனூஷ நாணயக்கார ஆலோசனை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கான மலேசியத் தூதுவர் டெங்யெங் தாய் உடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது மலேசியத் தொழில் வாய்ப்புக்கான பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வீசாவை இடைநிறுத்தியிருந்த மலேசியா தற்போது மீண்டும் வீசா வழங்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்த அமைச்சரின் வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்படும் என்று மலேசியத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2016ம்ஆண்டு மனூஷ நாணயக்கார வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்தபோதும் இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri