தடுப்பூசி திட்டங்களுக்கு பயிற்சி அளிக்கப்படாத பணியாளர்கள்
கொவிட் தடுப்பூசி திட்டங்களுக்கு பயிற்சி அளிக்கப்படாத பணியாளர்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது என்ற கூற்றை பாதுகாப்பு செயலாளர், கமல் குணரத்ன நிராகரித்துள்ளார்.
தடுப்பூசி திட்டங்களுக்காக பீரங்கி படைப்பிரிவில் இருந்து இராணுவ வீரர்களை நியமிக்கவில்லை.
இராணுவ மருத்துவப் படையில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களையே நியமித்துள்ளதாக, அவர் இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
எனவே தடுப்பூசியைப் பெறுவதில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தடுப்பூசி இயக்கத்தில் இராணுவ மருத்துவ பணியாளர்களை நியமிப்பதற்கான முடிவை விளக்கிய அவர், சுகாதாரத் துறையால் இந்த செயல்முறையை மேற்கொள்ள முடியாதபோது இராணுவம், அதற்கு உதவ முன்வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொதுமக்கள், தொற்றுநோயால் இறந்து கொண்டிருந்தால், அது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார், .
