அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தை முற்றுகையிட்டஊழியர்கள்: குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் தங்களுக்கான கொடுப்பனவுகளை சரியானமுறையில் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் இதன்போது ஆர்பாட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
அத்தோடு, தங்களுக்கான கொடுப்பனவுகள் உரியமுறையில் வழங்கப்படாவிட்டால் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என ஊழியர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
