ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படவுள்ள இழப்பு: மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு
அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது ஊழியர் சேமலாப நிதியம் மறுசீரமைப்புக்கு உள்ளாவதால், ஊழியர் சேமலாப நிதிக்கு 04 வீதமான நட்டத்தையே எதிர்கொள்ள நேருமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறான மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் ஊழியர்சேமலாப நிதியத்திற்கு 21 வீத நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு முன்னிலையில் மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக் குழுவில் பங்கேற்றிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு மற்றும் அதன்மூலம் ஊழியர் சேமலாப நிதிக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் புதிய தகவல்கள்: பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது அம்பலம் - ஹக்கீம் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |