தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான அறிவை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர்

Tamils Jaffna Manusha Nanayakkara employee provident fund
By Kajinthan Jul 15, 2023 12:53 PM GMT
Report

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது, அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற் சந்தையாக இது அமையும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில் "வடக்கின் ஒளிமயம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் "Global fair 2023" நிகழ்வானது இன்று (15.07.2023) காலை 9.00 மணியளவில் யாழ். முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான அறிவை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர் | Employee Provident Fund And Jaffna Employees

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பமாக மனித வளத்தை உலகிற்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்பாக இத் தொழிற்சந்தை அமையவுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் வெளிநாட்டு தொழிற்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இங்குள்ள இளைஞர்கள் தொழில்வாய்ப்புக்களைத் தேடி வெளிநாடுகளுக்கு சென்றாலும் போதிய தொழிற்பயிற்சி, மொழிப்பயிற்சி, சட்ட ஆலோசனைகள் நிலை இல்லாத நிலையுள்ளது.

இவ்வாறானவற்றிற்கு இத் தொழிற்சந்தை மூலம் தீர்வு காண முடியும். 

தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான அறிவை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர் | Employee Provident Fund And Jaffna Employees

ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அறிவு

அதேபோல் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்கள் இன்றுவரை ஊழியர் சேமலாப நிதியைப் பெறாமலும், 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வேலையை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படும் என்ற வாய்ப்பை பலர் அறியாமலுள்ளனர்.

இவ்வாறு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற் சந்தையாக இது அமையும்.

தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான அறிவை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர் | Employee Provident Fund And Jaffna Employees

ஏனைய நான்கு மாவட்டங்களில் இத் தொழிற்சந்தை ஆரம்பிக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்திலே இத் திட்டம் வெற்றியளித்துள்ளது.

எனவே வட பிராந்தியத்தில் தொழிற் பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கூறியிருந்தார். அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்  என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US