யாழில் இருந்த வந்த தொடருந்தில் மது போதையில் சிக்கிய ஊழியர்
யாழ்- காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று வந்துக்கொண்டிருந்த இரவு நேர தபால் தொடருந்தில் படுத்துறங்கும் தொடருந்து பெட்டிகளுக்கு பொறுப்பாக இருக்கும் ஊழியர் மது போதையில் இருந்த நிலையில் அனுராதபுரம் தொடருந்து பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்

தொடருந்தின் பிரதான கட்டுப்பாட்டாளர்,அனுராதபுரம் தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அறிவித்ததை அடுத்து, அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது ஊழியரிடம் இருந்து மது வாசனை வீசியதாக தெரியவந்துள்ளது. ஊழியர் அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மது அருந்தி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தொடருந்து ஊழியர் மாளிகாவத்தை தொடருந்து தரிப்பிட அலுவலகத்தின் கீழ் பணிப்புரியும் ஊழியர் என தெரியவருகிறது. ஊழியர் தொடர்பில் தொடருந்து திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri