வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் டுபாய் மற்றும் கொழும்பு இடையில் புதிய விமானத்தை பயணத்தில் ஈடுபடுத்தவுள்ளது.
EK650/651 விமானங்களில் புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்புகளை கொண்ட போயிங் 777 விமானத்தை ஈடுபடுத்தவுள்ளது.
பிரீமியம் வணிக சேவை
புதிய புதுப்பித்தல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின் ஆகியவற்றைக் கொண்ட இந்த மேம்படுத்தப்பட்ட விமானம், வணிக வகுப்பு இருக்கைகளுடன் இலங்கைக்கு விமான சேவைகளை மேற்கொள்ளவுள்ளது.
தற்போது, எமிரேட்ஸ் அதன் விரிவான வலையமைப்பில் 40க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பிரீமியம் வணிக சேவைகளை வழங்குகிறது. இந்த விமானம் பிரீமியம் வணிக சேவையை வழங்கும்.
அத்துடன் கொழும்புக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகள் தங்கள் முழு பயணத்தையும் முன்பதிவு செய்துக் கொள்ள முடியும்.
எமிரேட்ஸ் விமானம்
மேலும் விமான பயணத்தின் போது சிறந்த அனுபவங்களையும் அனுபவிக்கலாம். எமிரேட்ஸ் விமானம் EK650 டுபாயில் இருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பை வந்தடைகிறது.
மற்றுமொரு விமானமான EK651 கொழும்பில் இருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு டுபாயை சென்றடைகின்றது.
பிரீமியம் வணிக சேவை டிக்கெட்டுகளை emirates.com, எமிரேட்ஸ் செயலி, ஒன்லைன், பயண முகவர்கள் மற்றும் எமிரேட்ஸ் ரிக்கெட் விற்பனை நிலையங்களில் முன்பதிவு செய்யலாம்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
