இலங்கையில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ்! கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட் வைரஸ் பிறழ்வானது நாட்டில் மோசமான நிலைமையை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் BA5 எனப்படும் ஒமிக்ரோன் உப பிறழ்வு மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொழும்பைச் சுற்றிய பகுதிகளில், BA5 எனப்படும் ஒமிக்ரோன் உப பிறழ்வு முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்
உலகில் தற்போது கோவிட் பரவல் வேகமாக பரவுவதற்கு காரணம் இந்த பிறழ்வு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பை சுற்றியுள்ள மக்கள் இது குறித்து அவதானமாக செயற்படுமாறும், எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.