இவர்களை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்! பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை திருடிச்சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி வீடொன்றிற்குள் நுழைந்த சந்தேகநபர்கள் இருவர் பணிப்பெண்ணை அச்சுறுத்தி 10,707,800 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம், தங்கப் பொருட்கள் அடங்கிய சிறிய பெட்டகத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பாதுகாப்பு கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பொரலஸ்கமுவ நிலைய கட்டளைத் தளபதி 071-8591646 மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தின் 011-2150769 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |