அறிகுறி தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள்! சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்
குழந்தைகள் மத்தியில் டெங்கு நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுப்பி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆபத்தான நிலைமை
மேலும்,நோய் அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
பெற்றோர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை மிகவும் கடினமான நிலையை அடைந்த பின்னர் வைத்தியசாலையில் சேர்ப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே கண் நோய் பரவி வருவதாகவும், தற்போது நோய் பரவல் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 37 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
