அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!
இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு இலக்கம் 2490/06 இன் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த மக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி இந்த வர்த்தமானி மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களின் பிரகாரமே இந்த அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan