அனர்த்தம் தொடர்பில் அவசர கலந்துரையாடல்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பார்க்கப்படும் வெள்ள அனர்த்த நிலைமைக்கான தயார்நிலைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இதன்போது ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு அக் குழுவினர்களுக்கான பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச
செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், நிர்வாக
உத்தியோகத்தர், முப்படையினர், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த
திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டோர் கலந்து
கொண்டிருந்தனர்.






பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
