வடக்கு வைத்தியசாலைகளிற்கான அவசர சிகிச்சை பிரிவு குறித்து ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M.Charels) பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08) நடைபெற்றுள்ளது.
ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
மாகாண சுகாதார துறையில் காணப்படும் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தரவு பொறிமுறை
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், வைத்தியசாலைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவுப் பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சுகாதார துறைக்கு தேவையான ஆளணி, வளப்பற்றாக்குறை, தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதுடன் அந்த பிரிவிற்கான ஆளணியை நியமித்து உரிய பயிற்சிகளை வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan