ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
காலி - ஹலிவல பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு காலியில் உள்ள தனது காணியில் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறக்க ஆதரவாளர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் தேர்தல் அலுவலகத்தை திறந்தால் கொன்று விடுவதாக மிரட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
