பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு அவசர உதவிகள்
கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்களாதேஷிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை ஏற்றிய பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இன்று (03) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.
இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான வலுவான நட்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கான பங்களாதேச உயர் ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் இந்த உதவிப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
உதவிப் பொருட்கள்
அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் மயூரி பெரேரா உள்ளிட்ட குழுவினர் உதவிப் பொருட்களைப் பொறுப்பேற்றனர்.

இந்தப் பொருட்களில் 1,000 நுளம்பு வலைகள், 500 உணவுப் பொதிகள், 10 கூடாரங்கள், 125 அவசர மருத்துவப் பெட்டிகள், பாதணி, கையுறைகள்,ஜெக்கட்டுகள், தலைக்கவசங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் ஆகியவை அடங்கும்.
இந்தப் உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்பட உள்ளன.