தமிழ் மக்களாட்சிச் செயற்குழு உதயம்
தமிழ் மக்களாட்சி செயற்குழு வின் செய்தியாளர் சந்திப்பு திருகோணமலையிலுள்ள விடுதியில் இன்று (30) நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் சமூக - அரசியல் வரலாற்று வெளியில், தமிழ் மக்கள் தங்கள் கூட்டுரிமையின் அடிப்படையில் அமைந்த கோரிக்கைகளை முன்வைத்து, மக்களாட்சி அறத்திற்குட்பட்டு, மக்கள் தங்கள் ஆணையை வலியுறுத்துவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கூட்டுக் கோரிக்கைகள் தொடர்பில் கருத்தொருமைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய, மக்களாட்சிக்குரிய வெளிப்படைத்தன்மையான வெளி இல்லாத சூழலில், அதற்கு மாற்றீடான சூழலை உருவாக்குவதற்கான வரலாற்றுத் தேவை உணரப்பட்டு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில் குறித்த அமைப்பானது உருவாக்கப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் தவத்திரு அகத்தியர் (Thavatthiru Agathiyar) அடிகளார், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவல் சட்டத்தரணிகளான யாழினி கௌதமன் (Yazhini Gautham), வி.எஸ். தனஞ்சயன் (V.S.Dhananjayan), சேவியர் விஜயகுமார் (Xavier Vijayakumar) ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செயற்பட வைப்பதும் மக்களின் கருத்துகளை கோரி செயற்படுத்துவதும் இவர்களின் நோக்கமாகும். இவர்களினால் கூட்டாக ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.










மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
