வவுனியாவில் உள்ள முச்சக்கர வண்டிகளில் அச்சிடப்பட்ட பொலிஸ் அவசர இலக்கங்கள்
வவுனியாவில்(Vavuniya) உள்ள முச்சக்கர வண்டிகளில் பொலிஸ் அவர இலக்கங்கள் மற்றும் யுக்திய நடவடிக்கை இலக்கம் என்பன பொறிப்பதற்காக முச்சக்கர வண்டியுடன் உரிமையாளர்கள் நேற்று (02.06.2024) காலை பொலிஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அழைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளில் யுக்திய மற்றும் பொலிஸ் அவசர இலக்கங்கள் முச்சக்கர வண்டிகளில் பொறிக்கப்பட்டன.
விண்ணப்ப படிவம்
இதற்காக முச்சக்கர வண்டிகளின் முழுமையான விபரம், சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் விபரங்கள் விண்ணப்ப படிவம் ஒன்றில் பெறப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடம் இருந்தும் 400 ரூபாய் வீதம் வவுனியா பொலிஸார் அறவிட்டதன் பின்னர் அவர்களுடைய முச்சக்கர வண்டிகளில் மஞ்சள் வர்ண பூச்சினால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் பதிவில் உள்ள முச்சக்கர வண்டிகள் மற்றும் தனியார் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் இந்த செயற்பாட்டுக்காக பொலிஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டு இருந்ததோடு அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் 400 ரூபாய் விதம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகரவின் ஆலோசனைக்கமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலிக் பெரேரா வழிநடத்தலில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.ஜெயகொடியின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு.எம்.ரி.பி. வாசலவின் அணியினர் குறித்த செயல்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |