எல்பிட்டிய வேட்பாளர்களின் செலவுக்கான வர்த்தமானி விரைவில்!
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல்
காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மொத்தம் 09 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்திருந்தன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
