இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பை இலங்கையுடன் ஒருங்கிணைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார்.
தனது அண்மைய இந்தோனேசியா விஜயத்தின் போது, இலங்கையுடன் உலகளாவிய ஸ்டார்லிங்க் வலையமைப்பை ஒருங்கிணைத்தல் தொடர்பாக மஸ்க் உடன், தாம் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இணைப்பு பிரச்சினைகள்
குறிப்பாக கொழும்பிற்கு வெளியே உள்ள இணைய இணைப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே ஸ்டார்லிங்க்கை இலங்கைக்கு கொண்டு வருவதன் நோக்கம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இது தொடர்பான பூர்வாங்க வேலைகள் முடிந்த நிலையில், ஸ்டார்லிங்க் வலையமைப்பு தொடர்பில் இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு மதிப்பிடுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan