உடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்: விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

Nuwara Eliya Sri Lanka Weather
By Mayuri May 27, 2024 09:00 AM GMT
Report

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம், எனவே மீள் அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடற்தொழில்களில் ஈடுபடுவோர் இருப்பின், அவர்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கடற்றொழில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்: விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல் | Weather Sri Lanka Warning To People

அத்துடன், தற்போது பெய்து வரும் பருவ மழையினால் அனர்த்தம் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117க்கு அறிவிக்குமாறு திணைக்களம் மக்களைக் கோரியுள்ளது.

முதலாம் இணைப்பு

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் (27.05.2024) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட விபரீதம்

இலங்கையில் திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட விபரீதம்

பலத்த காற்று

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் : சஜித்

25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் : சஜித்

உடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்: விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல் | Weather Sri Lanka Warning To People

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே 30 முதல் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வங்கக்கடலில் உருவான றீமால் புயல், நேற்றிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கக்கடலுக்கு இடையே கரையை கடந்திருக்கிறது.

இந்த புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இக் கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து கல்பிட்டி, கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்கவேண்டும் : தமிழக அரசியல்வாதி கோரிக்கை

போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்கவேண்டும் : தமிழக அரசியல்வாதி கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US