டிக்டொக்கை வாங்குவது தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு
டிக்டொக்(Tik Tok) செயலியை வாங்க தனக்கு விருப்பமில்லை என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) தெரிவித்துள்ளார்.
டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் சீனாவைச்(China) சேர்ந்தது என்பதால், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக்கை தடை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், ஜேர்மனியில் பெரும் செல்வந்தர் மத்தையாஸ் டெஃனர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் எலான் மஸ்க் டிக்டொக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டிக்டொக் செயலி
அவர் தனது உரையில், "டிக்டொக்கை வாங்க நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதை வாங்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை தனிப்பட்ட முறையில் டிக்டொக்கை பயன்படுத்துவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோபைடன் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவின்(USA) டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டொக் செயலி மூலம் அமெரிக்கர்களை சீனா உளவு பார்க்கிறது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற உடன், டிக்டொக் செயலி தடை செய்யப்படுவதை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
டிக்டொக் செயலிக்கு தடை
டிக்டொக் செயலியை தடை செய்வதை 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிக்டொக் செயலி செயல்பட வேண்டும் எனில், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அதன் 50 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும், சீன நிறுவனத்தின் டிக்டொக் செயலியை தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கினால், அதனை வரவேற்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
