ட்ரம்ப்பிடம் இருந்து விரைவில் விலகும் எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) நிர்வாகத்திடமிருந்து விலகுவது தொடர்பில் சிந்தித்து வருவதாக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் எலான் மஸ்க் இருந்து வருகின்றார்.
அவர் கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது பெரும் ஆதரவினை தெரிவித்திருந்தார்.
அரச செலவுகள்..
அத்துடன், ட்ரம்ப் நிர்வாகத்தில் அரச செலவுகளை குறைக்கும் டச் துறைக்கும் எலான் மஸ்க் தலைமை வகித்து வருகின்றார்.
இந்நிலையில், ட்ரம்ப்பிடம் இருந்து அவர் விரைவில் விலகவுள்ளதாக அறிவித்துள்ளமை சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதத்திற்குள் அவர் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டொலர் குறைத்து தற்போதைய பெடரல் அரசின் செலவை சுமார் 6 டிரில்லியனாக டொலர்களாக மாற்றிய பின்னர் இந்த பதவி விலகலை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
