ட்ரம்பின் அருவருப்பான திட்டம்..! கடுமையாக சாடிய மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி மற்றும் செலவுகள் தொடர்பான மசோதா அருவருப்பானது என தொழிலதிபர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவில் பெரிய வரி குறைப்புக்கள், அதிக பாதுகாப்பு செலவுகள் மற்றும் அரசாங்கத்தின் அதிக கடன் வாங்குதல் ஆகியவை அடங்கும்.
செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட 'Doge' எனப்படும் அரசங்கத்தின் திறன் துறையை மஸ்க் வழிநடத்தி பின்னர் அதிலிருந்து கடந்த மாதம் விலகியிருந்தார்.
வீணான செலவுகள்
இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த மசோதா, அவரது குழு செய்த கடின உழைப்புக்கு எதிரானது என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 600 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த மசோதா வீணான செலவுகளை உள்ளடக்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் விருப்பம்
இதேவேளை, இந்த மசோதாவுக்கு இன்னும் செனட் சபை ஒப்புதல் வழங்கவில்லை. அங்கு சில குடியரசுக் கட்சியினர் இதற்கு எதிராக உள்ளனர்.

கடன் உச்சவரம்பை உயர்த்தினால் அதை ஆதரிக்க மாட்டேன் என்று செனட்டர் ராண்ட் போல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜூலை 4ஆம் திகதிக்குள் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என ட்ரம்ப் விரும்புகின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam