அமெரிக்க - கனேடிய இராஜதந்திர உறவுமுறைக்கு முற்றுப்புள்ளி.. கார்னி அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டன என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எங்களை சிதைக்கப்பார்க்கின்றார். அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, இது ஒருபோதும் நடக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா எங்கள் வளங்களையும் நாட்டையும் தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்துவந்தேன் என அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் திட்டம்
கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது என குறிப்பிட்ட கார்னி , இது பெரும் துன்பியல் நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இரண்டு சுதந்திர, இறைமையுள்ள தேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன் எனவும் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
