தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் யாழ்.மக்களுக்கு பொருட்கள் வழங்கிய தேரர்
தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
உதவி செய்த ஊடக நிறுவனம்
இது தொடர்பில் மேலும் பேசிய தேரர்,
குறித்த நிவாரணப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு கொழும்பில் பிரபல ஊடக நிறுவனத்தின் தலைவருடன் கதைத்து உதவி செய்யுமாறு கோரினேன். அவருக்கு தமிழீழ விடுதலப் புலிகளுடன் தொடர்பு இருந்தது.

அவர் எனக்கு உதவி செய்து கொடுத்தார். அவரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. அதனால் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். யார் எங்களை பிரித்தது? நாங்களா சண்டை பிடித்து பிரிந்து கொண்டோம்.
தமிழ் மக்களின் பிரச்சினை
நாடாளுமன்றில் எனக்கு தான் அதிகம் தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் நாம் ஒன்றிணைய வேண்டும் என கோருகிறேன். ஒன்றிணைய தேவையான பல காரணங்கள் இருக்கின்றன. அதை பகிரங்கமாக தெரிவிக்க முடியாது.
நாங்கள் அனைவரும் இணைந்து பெரும் சக்தியாக இந்த நாட்டை முன்னெடுப்போம். எமது நாடு பொருளாதார நிலையில் பெரும் சவாலில் இருக்கிறது.
இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதனால் நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.