சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள்
நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக அம்பாறை சம்மாந்துறை செந்நெல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள், வளவு, வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி சில வீடுகளின் சுவர்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.
மேலும் அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன் அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.

பொதுமக்கள் விசனம்
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan