மட்டக்களப்பு எழுவான் நிரப்பரப்பிற்குள் மீண்டும் மீண்டும் உள்நுழையும் காட்டு யானைகள்
மட்டக்களப்பின் எழுவான் நிரப்பரப்பிற்குள் மீண்டும் மீண்டும் காட்டு யானைகள் உள் நுழைவதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு, மாங்காடு பகுதிகளில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் நேற்றையதினம் (22.10.2025) இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில், அங்கு உடனடியாக வருகை தந்த திணைக்களத்தினர் காட்டு யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களுக்கு அச்சுறுத்தல்
இந்தக் காட்டுயானைகள் கூட்டம் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக களுவாஞ்சிக்குடி பிரதேசம் முழுவதும் உணவு தேடி சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாரு பாருங்க Cineulagam
