'டிட்வா' ஏற்படுத்திய பரிதாபம்:காடுகளில் உணவின்றி தவிக்கும் யானைகள்
' டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து நிலவிய காலநிலையால் காடுகள் நீரில் மூழ்கிய நிலையில் நீர் வடிந்தோடும் நிலையில் காட்டு விலங்குகள் உணவின்றி பரிதவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய சோமாவத்தி புனித தலத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் உணவின்றி படுத்துக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள விலகங்குகள்
ஹெலிகொப்டர்கள் மூலம் அவசர உணவுப் பொருட்களை இறக்கும் சந்தர்ப்பத்தில் அவதானிக்கப்பட்ட காட்சிகள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீர் வடிந்து தரையில் ஆங்காங்கே தென்படும் புற்களை யானைகள் சாப்பிடும் அரிதான காட்சிகள் இந்த நாட்களில் சோமாவத்தி பகுதியில் காணக் கூடியதாக உள்ளன .

மழை மற்றும் வெள்ளம் காரணமாக காடுகள் நீரில் மூழ்கியுள்ளதால், இந்த நாட்களில் காட்டு விலங்குகளுக்கு உணவு கிடைப்பது கடினமாகிவிட்டது.
புனித தலத்திற்குச் செல்லும் பாதை இன்னும் தண்ணீரில் மூழ்கியுள்ளது, போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam