வில்பத்துக்கு யானைகளை அனுப்பும் முயற்சி! நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய பகுதிகளான, ஸ்ரவஸ்திபுர, தம்புத்தேகம, விலாச்சிய, மொரகொட மற்றும் தந்திரிமலை போன்ற பகுதிகளிலிருந்து வில்பத்து தேசிய பூங்காவிற்கு யானைகளை அனுப்பும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து சுமார் 150 யானைகள் மற்றும் குட்டிகள், ஒயாமடுவ பகுதியில் சிக்கி பட்டினி நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் பண்ணை
மனிதாபிமான விலங்கு மேலாண்மைக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சங்கத்தின் ஆலோசகரான சமித் நாணயக்காரவின் தகவல்படி, இந்த யானைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக ஒயாமடுவ தேசிய கால்நடை மேம்பாட்டு சபை பண்ணையில் உணவு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நிலைமையை நிர்வகிக்க யானைகள் பண்ணையை விட்டு வெளியேறி, இயற்கையான இடம்பெயர்வை மீண்டும் அனுமதிக்குமாறு, நாணயக்கார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் யானைகள் வில்பத்துவுக்கு விரட்டப்பட்டாலும் இவ்வளவு பெரிய யானைக் கூட்டத்துக்கு போதுமானதாக இருக்காது, இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
உயிரிழப்புகள்
அவற்றை விரட்ட பட்டாசுகளைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் - இது யானைகளை காது கேளாத அல்லது குருடாக்கவோ செய்யும்.
இதேவேளை விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்யும் யானைகளை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வில்பத்துவுக்கு குறித்த யானைகளை மீண்டும் அனுப்புவதே தமது இலக்கு என்று அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யானைகள் உடனடி ஆபத்தில் உள்ளன என்ற கூற்றுகளை அவர் நிராகரித்துள்ளார்.