நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்
இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட 7 இளம் யானைகளுக்கான (Elephants) பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது, நேற்றைய தினம் (27.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதற்கட்ட விசாரணையில் குறித்த யானைகள் சதுப்பு நிலங்களில் சிக்கி இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள்
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை அனர்த்தத்தால் இலங்கையில் அதிக விலங்குகள் பலியாகியுள்ள சம்பவமாக இது அமைந்துள்ளது.
மேலும், பொலன்னறுவை (Polonnaruwa) - திம்புலாகலவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் உள்ள யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, 2019ஆம் ஆண்டில், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இதேபோல் ஏழு யானைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |