ஒரே இரவில் பெருந்தொகையான பப்பாசி மரங்களை அழித்த யானைகள்(Video)
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் ஒரே இரவில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்கள் யானைகளால் முற்றாக துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யானை வேலி
இந்நிலையில் நேற்றையதினம்(11.11.2022) இரவு குறித்த தோட்டத்தினுள் உள்நுழைந்த யானைகள்
அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை
முறித்து நாசப்படுத்தியுள்ளன.
இதேவேளை அதற்கு அருகாமையில் உள்ள காணிக்குள்ளும் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் முறித்து அழித்துள்ளன.
யானை வேலி அமைக்கப்பட்ட பகுதிகளிலும் அவற்றை யானைகள் சேதப்படுத்தி விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் பகுதிகளில் உள்நுழைந்து நாசப்படுத்துவதாகவும் யானை வேலி அமைக்கப்பட்டும் தமக்கு பிரியோசனம் இல்லாமல் போயுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறு யானைகள் நகர்பகுதிகளுக்குள் வருவதில்லை என்றும் தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் இறக்கிவிடப்பட்டமையே இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
