பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழப்பு: தீவிர விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை- பொத்துவில் - ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீவிர விசாரணை
குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித-யானை மோதல்கள் மற்றும் யானைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொத்துவில் பகுதியில் மீண்டும் ஒரு யானை உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சுருக்குவலை பாவித்து மீன்பிடி நடவடிக்கை! மட்டு. ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் குற்றச்சாட்டு
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri