யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை கவிழ்த்த யானை
யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப்பை காட்டு யானை கவிழ்த்து வீழ்த்திய சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த யானையானது ஜீப்பை அமைதியாக நெருங்கி, அதன் தும்பிக்கையைப் பயன்படுத்தி வாகனத்தைத் தள்ளி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பூங்காவிற்குள் உள்ள கட்டகமுவ சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை பெரும் படையுடன் சுற்றிவளைத்த பொலிஸார் - காத்திருந்த அதிர்ச்சி
தனிமையான யானை
சஃபாரி ஜீப்பை கவிழ்த்த யானை, சஃபாரி வாகனங்கள் சந்திக்கும் வழக்கமான யானைகளில் ஒன்றல்ல என்றும் அது வனப்பகுதியிலிருந்து வெளிவந்த ஒரு புதிய, தனிமையான யானை என அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
இந்த யானை ஜீப்புகளுக்கு அரகில் பதுங்கிச் சென்று அதன் தும்பிக்கையைப் பயன்படுத்தி உணவு தேடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
எனினும் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, என்றும் ஆனால் ஜீப் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யால சஃபாரி ஜீப்
யால சஃபாரி ஜீப் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அஜித் பிரியந்த கூறுகையில், காட்டு யானைகளுடன் இதுபோன்ற சந்திப்புகள் பொதுவானவை.
பெரும்பாலான காட்டு யானைகள் நாம் உண்ணும் பழங்களைப் பற்றி அறிந்திருக்காது.
எனவே அவை பொதுவாக மக்கள் கொடுக்கும் உணவை உட்கொள்வதில்லை. இந்த யானைகள் அரிதாகவே வன்முறை நடத்தையை வெளிப்படுத்துகின்றன," என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
