அனுராதப்புரத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு
அனுராதப்புரத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அனுராதப்புரம் - தம்புத்தேகம பிரதேசத்தில் நேற்று (01.10.2022) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான நவரத்ன திஸாநாயக்க (வயது 59) என்பவறே உயிரிழந்துள்ளார்.
காட்டு யானை தாக்குதல்
உயிரிழந்தவர் நேற்று (01.10.2022) மோட்டார் சைக்கிளில் தனது வயல் பகுதிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் வயலுக்குச் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள்
இந்நிலையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவுறுத்தியும் எந்தப் பயனும் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து காட்டு யானைகளின் தாக்குதல் சம்பவங்கள் அங்கு பதிவாகி வருகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் யானை - மனித மோதலை குறைப்பதற்கான வேலைத்திட்டம் இந்த வருட
இறுதிக்குள் தயாரிக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு
அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
