யானை தாக்குதல் தொடர்பில் அரசிடம் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ள மக்கள், தம்மை பாதுகாக்க உதவுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மண்முனை மேற்கில் அமைந்துள்ள உன்னிச்சை கிராமத்தில் கடந்த 23.08.2023 புதன்கிழமை இரவு அன்று புகுந்த யானைகள் விவசாயி ஒருவனின் தென்னந்தோப்பினை அழித்து துவசம் செய்துள்ளது.
இதில் ஐந்து வருடங்களாகப் பராமரித்து வந்த சுமார் 25 தென்னை மரங்களை அழித்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
அப்பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலி இருந்தும் காட்டுயானைகள் அதனையும் கடந்து கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதுடன் வீடுகளையும் உடைத்து சேதப்படுத்தி வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்னர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருசில குடும்பங்கள் இணைந்து யானையின் தாக்கத்தில் இருந்து தமது உயிரையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கு உதவுமாறு இம்மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.












வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
