அநுரவுக்கு பாதுகாப்பு அவசியம் : வலியுறுத்தும் சஜித் தரப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு போதுமான பாதுகாப்பு தேவை எனவும் அதே நேரத்தில் அவர் பொழுதுபோக்கை அனுபவிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் ஆடம்பரங்களை
ஒரு ஜனாதிபதி தனது பணியைச் செய்யும்போது மன அழுத்தத்துக்கு ஆளாகிறார். எனவே, ஒருவர் எப்போதும் மன அழுத்தத்தில் வேலை செய்யக் கூடாது என்பதால் அவருக்கு பொழுதுபோக்கு தேவை.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அவர்கள் கடந்த காலத்தில் தேசத்துக்காக சேவை செய்தவர்கள். எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.
இருப்பினும், அவர்களுக்கு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற கூடுதல் ஆடம்பரங்களை வழங்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 56 நிமிடங்கள் முன்

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
