யானையும் அங்குசமும் எங்களிடம்-இன்னும் சில யானைகள் வருகின்றன-ரோஹித்த அபேகுணவர்தன
புனித பேழையை சுமந்து செல்லும் சிறந்த இன யானைகள் எதிர்காலத்தில் ஆளும் கட்சியின் பக்கம் வரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2023 ஆம ஆணடுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யானை பெற்றுக்கொள்ளும் போது அங்குசத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் யானையும் அங்குசத்தையும் பெற்றுக்கொண்டோம். மேலும் யானைகள் வரிசையில் வருகின்றன.
அங்குசம் எங்கள் பக்கம்-யானைகளை கட்டுப்படுத்த முடியும்
உடவலவில் இருக்கும் பிச்சை எடுக்கும் யானைகள் அல்ல. புனித பேழையை சுமந்து செல்லும் சிறந்த இன யானைகள்.திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தலதா அத்துகோரள போன்ற சிறந்த யானைகள் இருக்கின்றன.
அங்குசம் இந்த பக்கத்தில் இருப்பதால், அவர்களையும் கட்டுப்படுத்த முடியும் என ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
