மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மின் கட்டணம்
அத்தோடு,இதற்கான முன்மொழிவை மின்சார சபை சமர்ப்பித்துள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காது போனாலும் மின்கட்டணத்தை அதிகரிக்கும் நிலைப்பாட்டில் மின்சார சபை உறுதியாக உள்ளது.
உற்பத்திச் செலவை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மின்கட்டணத்தைக் குறைந்தது 18.3 வீதத்தினால் அதிகரித்தே ஆகவேண்டும் என்று மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.
மின்சக்தியின் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான கட்டண அதிகரிப்பொன்றை மேற்கொள்ளாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணை வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் பின்னணியிலேயே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-அஸ்ரப் அலி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
