மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்: முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை மே மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 27ஆம் திகதியிலிருந்து மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை
இந்நிலையில், , இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க, மின்சார கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்படி கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri