மின்சாரக் கட்டண அதிகரிப்பின் எதிரொலி:மாத இறுதியில் நிகழவுள்ள இடம்பெயர்வு
நாட்டில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் பல அறிவிப்புக்கள் வெளியாகின்றன.
ஏற்கனவே மின்சாரக் கட்டணம் கடந்த மாதத்தில் அதிக வீதத்தில் அதிகரிக்கப்பட்டது.
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு
இந்நிலையில் கடந்த அமைச்சரவையில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதனால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவது மட்டுமன்றி பல தொழிற்துறைகளும் பாதிப்படையும்.
இது தொடர்பில் வர்த்தக மண்டல ஊழியர்களின் தேசிய மையம் கருத்து தெரிவித்துள்ளது.
தொழிற்துறைகளுக்கு நெருக்கடி
மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் ஆடைத் தொழில் முற்றிலும் நலிவடையும் என அந்த தேசிய மையம் கூறுகின்றது.
பல ஆடைத் தொழிற்சாலைகள் இம்மாத இறுதியில் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வலய ஊழியர் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
