மின்சார கட்டணம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள புதிய ஆலோசனை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூல ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய ஆலோசனை

இது தொடர்பில் அவர் மேலும் தெரியவிக்கையில்,“மாதாந்தம் 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மத வழிபாட்டுத் தலங்கள் பொதுநோக்க பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.
2022 ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 32 ரூபாயாக அறவிடப்படும்.
மின் கட்டண திருத்தம்

சமீபத்திய மின் கட்டண திருத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்டில் மாதத்திற்கு 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு யூனிட்டுக்கு 65 ரூபாய் விதிக்கப்பட்டது.
இந்த மாற்றம் 180 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களின் மின்சார கட்டணத்தை குறைக்கும்.”என தெரிவித்துள்ளார்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam