தினமும் 2 மணி நேரம் 5 நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்
மின்சார உற்பத்திக்கு தேவையான போதுமான எரிபொருள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள நீரேந்தும் நீர் தேக்கங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தினால், சில தினங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு 2.15 மணி நேரம் மின் துண்டிப்பு

இதனடிப்படையில், இந்த மாதம் 13 ஆம் திகதியும் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை 5 தினங்களுக்கு அனைத்து வலயங்களிலும் 2 மணியும் 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்துள்ளது.
20 வலயங்கள்

இந்த 5 தினங்களில் A முதல் W வரையான 20 வலயங்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையான காலத்தில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை கூறியுள்ளது.
இதனை தவிர 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் அனைத்து வலயங்களிலும் பிற்பகல் 5.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலத்தில் அவ்வப்போது தினமும் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் மின்சார சபை கூறியுள்ளது.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri