இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார அவசரகால நிலை குறித்து வெளியான தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணை பகுதியளவில் மூடப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் தற்போதைக்கு ‘தேசிய எரிசக்தி அவசரகால நிலையை’ பிரகடனப்படுத்தும் உடனடி தேவை இல்லை என்று எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், தற்போதைய நிலையில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
2 வாரங்களுக்கு முன்பு
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "எதிர்கால பாதிப்புகளைக் கணிப்பதை விட, தற்போதைய நிலையில் எரிசக்தி சேமிப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது" என்று தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடியை சமாளிக்க 'இலங்கையைப் பாதுகாப்போம்' எனும் திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு
இதன்படி புதன்கிழமைகளில் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்க நிறுவனங்கள் தங்களின் எரிபொருள் பயன்பாட்டை 25 சதவீதம் வரை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் (Peak Hours), பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் பேராதனை உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணைப் பகுதி நீண்ட காலத்திற்கு மூடப்பட்டிருந்தால், இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, உர விநியோகத் தடை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலை குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளிடம் கருத்துப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam