புதிய மின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி குறித்த யோசனையை நடைமுறைப்படுத்த முடியாதென இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் கூறியுள்ளார்.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள மின்சார கட்டணங்கள் மாற்றமின்றி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாத பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணங்களை குறைக்க இலங்கை மின்சார சபைக்கு முடியுமான போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
