மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை! அமைச்சு மறுப்பறிக்கை
மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமைச்சு மறுப்பறிக்கை
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாப்பிட்டிய வெளிநாடு செல்வதற்காக குறுகிய காலத்திற்கான விடுமுறையொன்றை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த விடுமுறைக்கான அனுமதி கோரியே அவர் கடிதமொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
மற்றும்படி அவர் தனது பதவியிலிருந்து விலகவில்லை.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மீண்டும் மின்சார சபையின் தலைவர் பதவியில் தொடர்வார் என்றும் குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.