கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள், கல்முனை (Kalmunai) அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றையதினம் (09.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டக்காரர்கள், 2024ஆம் ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு மற்றும் வேலை நீக்கம் செய்த 62 தொழிலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அமைதி வழிப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை மின்சாரத் தொழிற்சங்கம்
மேலும், மின்சார தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லையெனில் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என ஊடகங்களிடம் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சுமார் 50இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன் இலங்கை மின்சாரத் தொழிற்சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri